1896-ம் ஆண்டு, பல்வேறு உதிரிப் பாகங்களையும் பல்வேறு உலோகங்களையும் கொண்டு தன் வீட்டில் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் ஒரு வாகனத்தை வடிவமைத்தார். பார்ப்பதற்கு சைக்கிள் போன்று தோற்றமளித்த நான்கு சக்கரங்கள், ஒரு இருக்கையும் கொண்ட அதற்கு ‘க்வாட்ரி சைக்கிள்’ என்று பெயரிட்டார். அதை ஓட்டிப் பார்க்க எண்ணியபோது கூடாரத்தின் கதவு சிறிதாக இருந்ததால் அதை வெளியே கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்தார்.
ஆனால், தான் தயாரித்த வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து அந்தச் செங்கல் சுவற்றைத் தகர்த்து, வாகனத்தை வெளியே கொண்டு வந்து வீதிகளில் வலம் வந்தார். எடிசன் நிறுவனத்துக்காக 1898-ல் இரண்டாவது மாடலை உருவாக்கினார். சாமான்யர்களும் கார் வாங்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் தயாரிப்பு செலவு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டார்.
தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான ‘மாடல் டி’ கார்கள் ஆயிரக் கணக்கில் விற்பனையாகின. 18 ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது இவரது நிறுவனம்.

