தன் காதலனுக்கு கஷாயத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் காதலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த ஷாரோன் ராஜும், கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்துள்ளனர்.
ஷரோன் ராஜ் உடனான தொடர்பை கிரீஷ்மா துண்டித்த பிறகும், அவர் தொடர்ந்து காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தொல்லை தரும் ஷரோனை கொல்ல முடிவு செய்து கிரீஷ்மா, அவருக்கு விஷம் கலந்த கஷாயம் கொடுத்துள்ளார்.
விஷம் கலந்த கஷாயத்தை குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஷரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

