Wednesday, April 8, 2026
HomeUncategorizedகிரெடிட் கார்டுகளை வாங்குவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

கிரெடிட் கார்டுகளை வாங்குவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

நம் நாட்டில் கிரெடிட் கார்டுகளை வாங்குவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 8,16,195 பேர் கிரெடிட் கார்டுகளை வாங்கி உள்ளனர்.

இதற்கு காரணம், வரும் திருமண சீசன், கோடை விடுமுறை காலங்களில் ஜாலியாக கொண்டாட மக்கள் விரும்புவதால் கிரெடிட் கார்டுகளை நாடி வருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,50,000 கார்டுகள் வழங்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, எச்.டி.எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும், கிரெடிட் கார்டுகள் வாயிலாக, 1.9 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, புழக்கத்தில் உள்ள மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை டிசம்பர் 2024 இறுதிக்குள் 10.8 கோடியை எட்டி உள்ளது.

இப்போது 11 கோடியை நிச்சயம் கடந்திருக்கும். இந்த எண்ணிக்கை, நவம்பர் மாதம் 2024ல் 10.72 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதம் 2023ல் 9.79 கோடியாக இருந்தது.

அதாவது, ஓராண்டு காலத்தில் ஒரு கோடி பேர் புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments