Wednesday, March 4, 2026
HomeUncategorizedகிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்......

கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்……

தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகை ரோஹிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

பாலியல் தொல்லை புகார் – சென்னை பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி – ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments