Friday, March 13, 2026
HomeUncategorizedகி.வீரமணிக்கு கொரோனா - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

கி.வீரமணிக்கு கொரோனா – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து இன்று காலை சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் அவருக்கு தொடர்ந்து தீவிர கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அவரது மனைவி மோகனாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர் என்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன எனவும் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments