தெருநாய் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் தெரு நாய்களை காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்கள் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இன்னொரு பக்கம் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்தையும் பிடிக்க வேண்டும் என்று போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் முதல் டிவி ஷோ முதல் தற்போது இந்த டாபிக் ட்ரெண்டிங் டாப்பிக்காக மாறி உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து கமல்ஹாசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நாயை பற்றி கேட்டதற்கு கழுதையைப் பற்றி பதில் அளித்தது பலரையும் கடுப்பாகியுள்ளது.
இந்நிலையில், தெருநாய் பிரச்சனை குறித்து நடிகரும்,மாநிலவை MP யும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு மிகவும் எளிதானது. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் தெரிந்தவர்கள்.. கழுதை காணாமல் போனது குறித்து கவலைப்படுகிறார்களா? கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. இப்போது பார்க்கிறதே இல்லையே.. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.. எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து ”என்று தெரிவித்துள்ளார். இவரது பதில் பலரையும் டென்ஷன் ஆக்கியதுடன், பேசுபொருளாகவும் மாறி வருகிறது.

