Home Uncategorized சூடு பிடித்த THUG LIFE அட்வான்ஸ் புக்கிங்! ஆரம்பமே அசத்தலா இருக்கே!

சூடு பிடித்த THUG LIFE அட்வான்ஸ் புக்கிங்! ஆரம்பமே அசத்தலா இருக்கே!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்ட  பலரும் நடித்துள்ள திரைப்படம் தான் THUG LIFE.  கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகின்றது.

Thug life

கன்னட மொழி பிரச்சினையால் THUG LIFE திரைப்படம் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று தீவிரமாக உள்ளார். இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போல் தெரிகிறது. 
 அதாவது தற்போது வரை மட்டும், சுமார் 77 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அட்வான்ஸ் புக்கிங் மட்டும் இந்திய அளவில் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு நாளை மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 5) முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதிக்காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். ரசிகர்கள் இருக்கும் ஆர்வத்தை பார்த்தால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version