புதுக்கோட்டை கம்பன் பெருவிழா கடந்த 12/07/2024 அன்று தொடங்கப்பட்டு சீரும் சிறப்புறவும் நடந்து வருகிறது. அவ்வகையில் நிகழ்ச்சியின் ஏழாம் நாளான (18/07/2024) இன்று முதல்பகுதியாக ‘உரை அரங்கம்” என்னும் பெயரில் நடைபெற்றது.
பிரபல பேச்சாளரும், கவிஞருமான “மரபின் முத்தைய்யா “அவர்கள் ‘உலகெலாம் கலக்கி வென்றான்’ என்கிற தலைப்பில் மிகச்சிறப்பான உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு இணைச்செயலாளர். திருகாடுவெட்டி குமார் வரவேற்புரை நிகழ்த்த, திரு. இளங்குமார் சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் திரு.அ.விஜயகுமார், வழக்கறிஞர் திரு.சி.ஜெகதீசன், வழக்கறிஞர். புரட்சி கவிதாசன், தொழிலதிபர் திரு. இராம. சேதுபதி அம்பலக்காரர், திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் திருமதி. கவிதா ஸ்ரீகாந்ந், “வெல்நெஸ் ரிஸார்ட்ஸ்” நாற்சந்துப்பட்டி திரு. செல்வம் அழகப்பன் , கந்தர்வக்கோட்டை தொழிலதிபர் திரு. என்.ராமசந்திரன், இந்திய உணவுப் பாதுகாப்புக்கழக உறுப்பினர் திரு.ஆர்.ஜீவானந்தம், ரியல் எஸ்டேட் திரு.என்.குமார், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் திரு. ச.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்க, விழாக்குழு உறுப்பினர் திரு.காசி. ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
