Home Uncategorized புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியில்  பாலர் பள்ளி முதல் கல்லூரியில் பயில்வோர் வரை கம்பனின் கவிதைகளைப்பாடியும், பேசியும் அசத்தினர். தொடர்ந்து இலக்கியப் போட்டிகளில் பரிசுகளை வென்றெடுத்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்கள் , அதிகப் பரிசுகளை வென்றெடுத்த சிறந்த பள்ளிகள் என அனைவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கும் மகத்தான நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், திருச்சி முன்னாள் மேயருமான திருமதி. சாருபாலா தொண்டைமான் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பாகும். 

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையினை திரு.கறு.ராமசாமி வழங்க, சிறப்பு விருந்தினர்களாக ஜெ.ஜெ.கல்லூரிகள் திருமதிப கவிதா சுப்ரமணியன் மற்றும் சேலம் மனம் மன்றத்தின் தலைவர் முனைவர் உமையாள் சந்திரகாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாநகராட்சித்தலைவர் திருமதி. திலகவதி செந்தில்  அவர்கள் தலைமையேற்று வெற்றி பெற்றோரை பாராட்டி, பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தினார். திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.வள்ளியம்மை தங்கமணி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மேகலா தங்கமுத்து, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி. காமு மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.க.பிரேமலதா,முன்னாள் தக்கார் திரு.இராம.வைரவன், செந்தூரான் கல்லூரிகள் திரு.ஏ.வி.எம். கார்த்திக் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர். திருமதி.செந்தாமரை பாலு, நாட்டியாலயா ஆலோசகர் திருமதி ஜெயலெட்சுமி சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திருமதி.ரேவதி செல்லத்துரை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Exit mobile version