Home Uncategorized ‘கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக ஜோதிகா அறிக்கை

‘கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக ஜோதிகா அறிக்கை

மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்?

படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் – ஜோதிகா

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறோம். குறை இல்லாத படத்தை எடுக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக படத்தையும் விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ஊடங்கள் மற்றும் சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் ஆச்சியமாக இருக்கிறது. சில பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றிற்கு வராத விமர்சனங்கள், கங்குவாவுக்கு மட்டும் ஏன்? முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனம் வர ஆரம்பித்து விட்டது. இதனை பல குழுக்கள் திட்டமிட்டு செய்கிறது” என்று கூறியுள்ளார்.

Exit mobile version