கனமழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தெற்கு, மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு (18ஆம் தேதி வரை) கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னையை பொருத்தவரை நகரின் ஒருசில இடங்களில் 16ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.