Thursday, March 26, 2026
HomeUncategorizedகொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- முதலமைச்சர் உத்தரவு

கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments