Thursday, April 9, 2026
HomeUncategorizedகொடுத்த வாக்கை நிறைவேற்றிய மோடி அரசு

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மோடி அரசு

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2018-ல் துவங்கப்பட்ட “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” திட்டத்தின் கீழ், 70 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது

நமது மத்திய அரசு. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களும் இணைக்கப்படுவார்கள் என்று கொடுத்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக் காட்டியுள்ளது

நமது பாரதப்பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு. இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 30 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நமது தேசத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பாரத மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில முக்கிய முடிவுகள்;

2024-25 முதல் 2031-32 வரை செயல்படுத்தவுள்ள, நீர்மின் திட்டங்களுக்கு ₹12,461 கோடி நிதி ஒதுக்கீடு.

2024-25 முதல் 2028-29 வரை 38,000 க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக ₹3,435.33 கோடி ஒதுக்கீடு.

பிரதமரின் E-Drive திட்டத்திற்கு ₹10,900 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு. இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், E-ஆம்புலன்ஸ்கள், E- டிரக்குகளுக்கான மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க ₹.3,679 கோடியும், E-ஆம்புலன்ஸ்களுக்கு ₹500 கோடியும், 14,028 E-பேருந்துகளுக்கு ₹4,391 கோடியும் ஒதுக்கப்படும்.

வானிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான “மிஷன் மௌசம்” திட்டத்திற்கு, ₹2000 கோடி ஒதுக்கீடு.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ், 62,5000 கிமீ தூரத்திற்கு சாலைகள் அமைப்பதற்கு ₹70,125 கோடி நிதி ஒதுக்கீடு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments