கர்நாடக மாநில நிதித்துறையில் இருந்து அனைத்து அரசு துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் எந்த அரசுத் துறையும் கணக்கு மற்றும் டெபாசிட் வைத்திருந்தால் அதை உடனடியாக ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இரு வங்கிகளிலும் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது என்று கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.
அடுத்து எந்த வங்கியில் கணக்குகளை துவக்க வேண்டும் என்ற விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை
