Home செய்திகள் கரூர் விபத்து: அரசுப் பணி நியமனங்கள் தற்காலிகம் மட்டுமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரூர் விபத்து: அரசுப் பணி நியமனங்கள் தற்காலிகம் மட்டுமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போதைய சூழலில் அரசுப் பணி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மதுரை அமர்வு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் வழங்கும் இந்த அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Exit mobile version