குழந்தைகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஹிந்து குழந்தைகள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து புது டெல்லியில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவலை தெரிவித்துள்ளது. இதன் தலைவர் பிரியங்க கனுாங்கோ தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஹிந்து குழந்தைகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. அவர்களின் மத சுதந்திரத்தை யாரும் மீறக்கூடாது.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான இந்த விஷயத்தில், தவறான நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்பி, குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என, பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.

