Home Uncategorized ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தனுஷ் !

‘குபேரா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தனுஷ் !

வெளியானது தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் டீசர்! ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கி, நடிக்கும் புதிய படம் ‘இட்லி கடை’. இது தவிர நடிகராக தன் கைவசம் ‘குபேரா, தேரே இஷ்க் மெய்ன், கலாம்’, இயக்குநர் விக்னேஷ் ராஜா படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் படம் என ஆறு படங்கள் உள்ளது.

இதில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில், இதன் முதல் சிங்கிள் ட்ராக் வெளியானது. தற்போது, இந்த படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Exit mobile version