Thursday, March 12, 2026
HomeUncategorizedகுறைந்து வரும் பிறப்பு விகிதம் ஓர் அலசல்

குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஓர் அலசல்

கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,42,412 குழந்தை பிறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது லட்சதுக்கும் மேலான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 9,02,306 பிறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.6% குறைந்துள்ளது என பொது சுகாதாராத்துறை இயக்குநரக தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பிறப்பு விகிதம் 2023ம் ஆண்டு 11.7 ஆகவும், 2024-ம் ஆண்டில் 10.9 ஆகவும் இருந்தது.

பொது சுகாரத்துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், “பிற வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளை போல இங்கும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனினும், பிறப்பு விகிதம் குறைவதற்கு நிறைய நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒரு சவாலாகும்” என்றார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதார மையத்தின் தலைவர் ஜேக்கப் ஜான், “பிறப்பு விகிதம் குறைவது, உடல்நல காரணங்களால் ஏற்படவில்லை, பொருளாதார, சமூக காரணங்களால் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைவது, வேலை செய்யும் வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதற்கேற்ற திட்டமிடல்கள் தேவை” என்று கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments