Tuesday, May 5, 2026
Homeசெய்திகள்அரசு வாகனம் இல்லை – எளிமையாக வீடு திரும்பிய பினராயி விஜயன்!

அரசு வாகனம் இல்லை – எளிமையாக வீடு திரும்பிய பினராயி விஜயன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதலமைச்சர் பினராயி விஜயன் தனது அதிகாரப்பூர்வ வாகனம் மற்றும் கமாண்டோ பாதுகாப்புப் படையைத் தவிர்த்துவிட்டு, சாதாரண வாகனத்தில் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸிற்கு’ (Cliff House) திரும்பினார்.

ஜனநாயக நடைமுறையின்படி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு முதலமைச்சர் மேற்கொள்ளும் இந்த எதார்த்தமான நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சூழலில், எவ்வித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் தனது இல்லத்திற்குச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments