Sunday, March 22, 2026
HomeசினிமாKGF நடிகர் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

KGF நடிகர் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல கன்னட நடிகரும், ‘KGF’ திரைப்படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்த தினேஷ் மங்களூரு (வயது 55) இன்று (ஆகஸ்ட் 25) காலமானார்.

உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த அவருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை நேசித்த ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ் மங்களூரு, ‘KGF’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நிலைத்த மனிதராக மாறியவர். அதன் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு கன்னட மற்றும் பன்முகப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments