நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!
Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.
சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “கொடுவா”. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

