Wednesday, February 4, 2026
HomeUncategorizedகந்தகோட்டம் கந்தசாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கந்தகோட்டம் கந்தசாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சென்னை- பாரிமுனை பூங்கா நகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவில் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரசுவாமி கோவில் நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.91.50 லட்சத்தில் கோவில் ராஜகோபுரம், அனைத்து சன்னதிகள் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது.

 இதனை அடுத்து நேற்று கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடந்த பத்தாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள் நடந்தது. ஆறாம் கட்ட யாக சாலை பூஜைக்கு பின்னர் கலசங்கள் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான ப’க்தர்கள் கலந்து கொண்டு “கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷம் முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments