திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றிவரும் வில்லியம் (44) . நேற்று பணியிலிருந்தபோது திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வந்தார். அவரை வில்லியம் வரிசையில் வரச் சொன்னார் என்பதற்காக கிரிஜா ஆபாச வார்த்தைகளால் திட்டி வில்லியம்சை காலால் எட்டி உதைத்தார்.
இது குறித்து வில்லியம் கொடுத்த புகாரின் போலீசார் கிரிஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே இதே போல் ஒரு சம்பவம் தொடர்பாக கிரிஜா ஏற்கனவே கைது செய்யப்பட்டவராம்.

