Saturday, March 7, 2026
HomeUncategorizedலியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பு

லியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தப்படத்தை  டைரக்ட் பண்ணி வாறார். பொதுவாக இவரது படத்தில் வில்லன்களுக்கு வெயிட்டான ரோல்கள் இருக்கும். அந்த வகையில் தற்போது ‘லியோ’ படத்தில் ஏராளமான வில்லன்கள் நடிச்சு வாராய்ங்க

கமிட்  ஆகி இருக்கும்அம்புட்டு பேருமே வெயிட்டான ஆட்கள் என்பதால் ‘லியோ’ படத்தில் யார் மெயினான வில்லனாக இருப்பர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த சந்தேகத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி ‘லியோ’ பட தயாரிப்பாளர் லலித் குமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ’ படத்தின் மெயின் வில்லன் சஞ்சய் தத் தான் அப்படீன்னு சொல்லி இருக்கார். ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் போல் இருக்கும் என்றும் தெரிவிச்சிருக்கார். 

முன்னதாக ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத், விஜய்க்கு அப்பாவாக நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிச்சு. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரின் கதாபாத்திரம் குறித்து தற்போது தெளிவுப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். ‘கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய சஞ்சய் தத், தற்போது ‘லியோ’ படத்தில் மெயின் வில்லன் என கன்பார்ம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே நேரம் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டுச்சு. அதே போல் ‘லியோ’ படத்திலும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்றும் ரசிகர்கள் பயப்படுறாய்ங்க.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments