Home Uncategorized LIC தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் – இயக்குனர் SS குமரன்

LIC தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் – இயக்குனர் SS குமரன்

மதிப்பிற்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.விக்னேஷ் சிவனின் புதிய படத்திற்கு எல் ஐ சி என்று பெயர் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.காரணம் என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் மூலம் 2015ல் எல்ஐசி என்ற பெயரை பதிவு செய்துள்ளேன்.

இதையறிந்த திரு.விக்னேஷ் சிவன், தனது புதிய படத்திற்கு தலைப்பு வைக்கக் கோரி அவரது மேலாளர் திரு.மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு எல்.ஐ.சி என்ற தலைப்பு கச்சிதமாக பொருந்தியதாலும், அந்த தலைப்பின் அடிப்படையில் கதையின் பலம் அமைந்ததாலும் மறுத்துவிட்டேன். எனவே இந்த தலைப்பை நான் முறையாக பதிவு செய்துள்ளேன் என்பது திரு.விக்னேஷ் சிவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அவர் தனது படத்திற்கு இந்த தலைப்பை வைப்பதாக கூறுவது சட்டவிரோதம் மட்டுமின்றி எளிய, சிறு தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

 

இந்த செயல் முற்றிலும் தன்னிச்சையானது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகங்கள் முன் நிற்கிறேன். திரு.விக்னேஷ் சிவன் எல்.ஐ.சி என்ற டைட்டிலை எனது படத்தில் மட்டும் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.விக்னேஷ் சிவன் இந்த செயலை தொடர்ந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Exit mobile version