Monday, March 23, 2026
HomeUncategorizedஅடிக்கடி சண்டை வருதா? சண்டைக்கு பிறகு எப்படி சமாதானம் ஆவது சூப்பர் டிப்ஸ்!

அடிக்கடி சண்டை வருதா? சண்டைக்கு பிறகு எப்படி சமாதானம் ஆவது சூப்பர் டிப்ஸ்!

புதிதாக திருமணமான தம்பதிகள் நமக்குள் சண்டையே வரக்கூடாது என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது உண்டு. ஆனால் இதுவரைக்கும் இடையே எப்போது சண்டை வரும் என்று யாருக்குமே தெரியாது. புதுமண தம்பதிகள் மட்டுமில்லாமல் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதிகளாக இருந்தாலும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். நம் வீட்டில் அப்பா அம்மா இடையே பல சண்டைகளை நாம் பார்த்திருப்போம். அதேபோல் இப்போது நமது வாழ்க்கையில் கணவர் மனைவிக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் வருவதுண்டு. 

சின்ன சின்ன சண்டைகள் வந்தால் அதனை உடனே சரி செய்து விடலாம் அதுவே சண்டை பெரியதாக இருந்தால் மனக்கசப்பு ஏற்பட்டு பல பேர் குடும்ப வாழ்க்கையில் இருந்தே பிரிந்து விடுகின்றனர். சண்டை வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

 புதிய உறவில் இருக்கும் பொழுது ஆரம்பத்தில் எல்லாமே சந்தோஷமாக தோன்றுவது போல இருக்கும். ஆனால் அதுவே நாட்கள் செல்ல செல்ல ஒரே மாதிரியான வாழ்க்கை, சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதுவே ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதில் அலட்சியம் ஏற்படும். சிலர் உடலுறவில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சில கணவன் மனைவி இடையே நேரத்தை கூட செலவழிப்பதில்லை. இப்படி இருந்தால் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி நிச்சயம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

  • எந்த சண்டையாக இருந்தாலும் அதை அப்பொழுதே தீர்த்து விட்டால் தொடராமல் பார்த்துக் கொண்டாலே அந்த உறவில் ஒரு நெருக்கம் இருக்கும்.
  • தனக்கு எது வேண்டும் என்று தோன்றுகிறதோ, அது தனது பார்ட்னருக்கும் தேவை என்று நினைக்க வேண்டும்.
  • ஒருவர் பேசும்போது மற்றவர் செவி கொடுத்து கேட்டாலே பாதி பிரச்சனைகள் இங்கு சரியாகிவிடும்.
  •  ஒருவர் கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றொருவர் பேசாமல் இருப்பதும். பிறகு அவர்கள் செய்யும் தவறினை எடுத்து கூறுவதினால் அவர்களுக்குள் இருக்கும் உறவு இன்னும் பலப்படும்.
  • சண்டையே வராமல் யாருடைய வாழ்க்கையும் இருக்காது. ஆனால் அந்த சண்டையை எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களின் உறவு நீடிக்கும்.
  • முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் ஒரு பிரச்சனையை முடிக்க முடியுமோ அதை முடித்துவிட்டு புதிதாக ஒரு விஷயத்தில் இருவரும் ஆர்வம் காட்டி வந்தால் இருவர்களுக்கும் இடையே இடைவெளி என்றும் வராது.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments