டெல்லியில் நடந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது; கடன்களை வசூலிக்கும் போது, வாடிக்கையாளர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி கடன்களை வசூலிக்க வேண்டும்.
ரூ.500 கடனை செலுத்தாதவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் கடினமாக நடந்து கொண்டதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. நீங்கள் உங்களின் வேலையைத் தான் செய்கிறீர்கள் என்பது தெரியும். ஆனால், மனசாட்சி இல்லாமல் செயல்படக் கூடாது.

