Home Uncategorized காவலர்களால் கொலையான அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி!

காவலர்களால் கொலையான அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாரின் மரண சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து இது தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் தற்போது காவலர்களால் கொலையான அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி வழங்கியுள்ளனர்.

திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர்.

அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.

Exit mobile version