Home Uncategorized மாமனார் ஆகும் இசைபுயல்!!

மாமனார் ஆகும் இசைபுயல்!!

ஏஆர் ரகுமான் – சாய்ரா பாணு தம்பதிக்கு அமீன், கதீஜா, ரெஹீமா ஆகிய ஒரு மகனும், இரு மகள்களும் இருக்காய்ங்க. 

இதில் மூத்த மகளான கதீஜாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டதாக தகவல்  வெளியாகியுள்ளது. தந்தையை போலவே இசையில் ஆர்வம் உள்ள கதீஜா பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கார் என்பதும்  எந்திரன் படத்தில் புதிய மனிதா பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த திருமண தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, ‘ரியாஷ்தீன் ஷேக் முகமது என்பவருடன் என்னுடைய நிச்சயதார்த்த விழா டிசம்பர் 29-ஆம் தேதி இனிதாக நிறைவுற்றது. ரியாஷ்தீன் சவுண்ட் எஞ்சினியராக உள்ளார் எனக் குறிப்பிட்டிருக்கார்.

Exit mobile version