பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் M.தியாகராஜன் அவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.
போலீஸ் வந்து ஆம்புலன்ஸ் மூலமாக கே.எம்.சி.மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்து சென்றுள்ளனர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.
DFT படித்த மாணவர் ஆன இவர் ஆரம்ப காலகட்டத்தில் அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்தை நம்பி வந்து சுற்றியவர்.
வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார்.
சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு இவரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலம்

