விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு!
நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் இதோ:
தணிக்கைக் குழுவின் (CBFC) தலைவர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ‘UA’ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்த பிறகும், தனிப்பட்ட ஒருவரின் புகாரை ஏற்றுப் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியது சட்டப்படி செல்லாது என நீதிபதி அறிவித்தார்.
படம் வெளியாவதற்கு முன்பே, அதில் உள்ள காட்சிகளைப் பார்க்காத யாரோ ஒருவர் அளித்த புகாரை (Afterthought) விசாரணைக்கு ஏற்பது ஒரு தவறான மற்றும் ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தணிக்கைக் குழு ஏற்கனவே பரிந்துரைத்த 27 மாற்றங்களை (Cuts) தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளதால், படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஇந்தத் தீர்ப்பின் மூலம் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள் நீங்கியுள்ளன. இருப்பினும், இன்று வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போயுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் (KDM விநியோகம் போன்றவை) படம் நாளை அல்லது பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி. பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவிப்பு.


