Home Uncategorized ’மேட் இன் இந்தியா’ லேபிள்

’மேட் இன் இந்தியா’ லேபிள்

ஒரு வேளை மூன்றாம் முறையாக வெற்றிகரமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் அதன் முதல் 100 நாட்களில் பல பிரத்யேக திட்டங்களை வரிசையாக வெளியிட தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் பாஜகவுக்கு ஆதரவாகும் இந்த ஏற்பாடுகள், அதிகாரிகள் வாயிலாக கசியவிடப்பட்டும் வருகின்றன.

இந்த பாஜக என்றில்லாது புதிதாக ஆட்சியில் பொறுப்பேற்கும் எந்த அரசாங்கம் என்றாலும், இந்த திட்டங்கள் முதல் 100 நாட்களில் அமலுக்கு வருமாக்கும். ஆனபோதும், நடப்பிலுள்ள பாஜக அரசின் முன்னெடுப்பிலான இந்த திட்டங்கள் அதன் பெருமைக்குரிய ஆட்சிப் பொறுப்பேற்பின் கொண்டாட்ட அடையாளமாக, முதல் 100 நாட்களில் வரிசையாக அறிவிப்பாக உள்ளன. அவற்றில் ஒன்றாக மேட் இன் இந்தியா லேபிள் திட்டமும் காத்திருக்கிறது.

இந்த திட்டமானது எலெக்ட்ரானிக்ஸ், மருந்துகள், தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகள் போன்ற பல்வேறு உற்பத்தித் துறைகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். இந்தியாவின் பெயரை உலகுக்கு சொல்லும் வகையில் இவை ’மேட் இன் இந்தியா’ லேபிள் அறிவிப்போடு இந்தியாவிலிருந்து பயணத்தை தொடங்கும்

Exit mobile version