Saturday, March 28, 2026
HomeUncategorizedமெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலை புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்துத்துறை சார்பில் மாற்றுப்பாதைகள் பரிந்துரைக்கப்பட்டு, சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரவு 11 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில், கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

ஆனால், போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுன்ட் பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பவேண்டும் .

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை (27ஆம் தேதி) வரை நடைமுறையில் இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments