Friday, March 6, 2026
HomeUncategorizedமஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும்

மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும்

சிவராத்திரி தினத்தில் 4 கால பூஜை என்பது மிகவும் முக்கியமானது.

அந்த 4 ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.

 

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம்.  – இந்த ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம்.

இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். – இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.

நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையிலானது, மூன்றாம் ஜாமம். இந்த ஜாமத்தில்  சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம்.

அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. “நான்காம் ஜாமம்” முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்

 

பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments