இந்தியா உட்பட பல நாடுகளிலும் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ஐடித்துறை மட்டுமல்லாமல் வேறு சில துறைகளிலும் அலுவலகம் வந்து பணியாற்றிய ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவியதில் இருந்து பல நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் 73% இந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்கால வேலை மாதிரியின் ஒரு பகுதியாக கலவையான வேலை முறையை அமல்படுத்துவதா என ஆலோசித்து வருவதாக புதிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

