Tuesday, March 10, 2026
HomeUncategorizedமின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது.

தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு?-எடப்பாடி பழனிசாமி.

கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது.

சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது; இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொகுப்பிலிருந்து தேவையான நிலக்கரியை பெறாத காரணத்தினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தியதால் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்தன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தோம்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு, தற்போதும் மின்வெட்டு- எடப்பாடி பழனிசாமி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments