Home Uncategorized மின்வெட்டு புகார்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின்வெட்டு புகார்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து கூறியதாவது:-

மின்வெட்டு விவகாரம்: மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி அளித்தது – அமைச்சர் செந்தில் பாலாஜி.

குஜராத், மஹாராஷ்டிராவில் நிலக்கரி பற்றாக்குறை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது

விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி.

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்தடை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version