தமிழக காவல்துறை உயர்மட்டத்தில் அரசு இன்று அதிரடி மாற்றங்களைச் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநராக இருக்கும் டிஜிபி சீமா அகர்வால், வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் பணிநிறைவு பெற உள்ள நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) புதிய தலைவராக டிஜிபி சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் கூடுதல் காவல்துறை தலைவர் (ADGP) ஆர். தினகரன், ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளைக் கவனிப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
