Sunday, March 15, 2026
HomeUncategorizedமலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்

மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்

மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

கேராளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பி, பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமை கொண்ட இன்னசென்ட் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மார்ச் 3ம் தேதி முதல் கோச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்தது குறித்து புத்தகத்தையும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் இன்னசென்ட் ஏற்படுத்தி வந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு திரைபிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments