Wednesday, March 11, 2026
HomeUncategorizedமோலிவுட் ஆக்டர் விநாயகன் அரெஸ்ட்! 

மோலிவுட் ஆக்டர் விநாயகன் அரெஸ்ட்! 

மலையாளத் திரையுலகில் நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் ‘காளை’, ‘திமிரு’, ‘சிறுத்தை’ உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடிச்சிருக்கார். 

மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுருக்குது.

இந்நிலையில், இன்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்குது. 

இந்த நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசிச்சு வாறார். இன்ன்னிக்கு அவர் குடியிருந்து வரும் எர்ணாகுளம் ஃபளாட் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டிருகார். 

இது தொடர்பாக  குடியிருப்பில் இருந்தவய்ங்க எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தாய்ங்க. 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைச்சுட்டு போனாய்ங்க  

அப்போது  இந்த ஆக்டர் புல் போதையில் இருந்துருக்கார். அச்சுழலில் கூட்டிச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தபோது, மறுபடியும்  ஓவரா சவுண்டு விட்டு அங்கிருந்த போலீஸ் ஹையர் ஆபீசர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். 

இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் அப்படீன்னு  எக்ஸ்ட்ரா வழக்குப் பதிவு செஞ்ச்ய்புட்டாய்ங்க. 

மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கிட்டிராய்ங்க.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments