ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் பிரதமர் நரேந்திர மோடி தான். செய்நன்றி இருப்பதால் தான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுகிறேன் – திருச்சியில் ஓ.பி.எஸ் பேச்சு.* எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையெனில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ராஜினாமா செய்ய வைப்பர். அதிமுகவில் அனைவரும் இணைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. நாம் இணைந்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிலும் வெற்றி பெரும் சூழல் உள்ளது.
இதை தடுப்பது யாரென்பது தொண்டர்களுக்கே வெளிச்சம். முதலமைச்சரான 3 மாதத்தில் கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்ற ஸ்டாலின் 3 வருடம் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உலகிலேயே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டில்தான்.
இந்நிலை மாற வேண்டும் – ஓ.பி.எஸ் பேச்சு.

