Home வணிகம் அதிரடியாக குறைக்கப்பட்ட மாருதி சுசுகி கார் விலை!

அதிரடியாக குறைக்கப்பட்ட மாருதி சுசுகி கார் விலை!

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 4 அடுக்குகளாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியை 2 அடுக்காக மாற்றி அமைத்துள்ளது. கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருகிற 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த சீர்திருத்தம் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு விலை குறைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. 

அதன்படி 
எஸ் பிரஸ்சோ – ரூ. 1,29,600 
ஆல்டோ கே 10 – ரூ. 1,07,600 
செலரியோ –  ரூ. 94,100 
வேகனார் – ரூ. 79,600 
இக்னிஸ் –  ரூ. 71,300 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

 பிரீமியம் கார்களுக்கான 
ஸ்விப்ட் – ரூ. 84,600 
பலினோ – ரூ. 86,100 
 டூர் எஸ் – ரூ. 67,200 
டிசையர் – ரூ. 87,700 வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version