Wednesday, April 29, 2026
Homeசெய்திகள்தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் பின் அதிரடி தூய்மைப் பணி!

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் பின் அதிரடி தூய்மைப் பணி!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்ற சித்திரைத் திருவிழா தேரோட்டத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று பிரம்மாண்ட தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தேரோட்டம் நடைபெற்ற நான்கு ராஜ வீதிகளிலும் குவிந்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர்கள் மற்றும் இதர குப்பைகளை சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாகச் சேகரித்தனர்.

இந்த அதிரடித் தூய்மைப் பணியின் மூலம் சுமார் 10 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டு, நான்கு வீதிகளும் பழையபடி பொலிவு பெறச் செய்யப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிய திருவிழாக் களத்தை அடுத்த சில மணி நேரங்களிலேயே போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்திய மாநகராட்சிப் பணியாளர்களின் இந்தச் சேவை பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments