Tuesday, March 17, 2026
HomeUncategorizedமதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

2019 தேர்தலில் போட்டியிட்ட கன்னியாகுமரி, விருதுநகர்,  சிவகங்கை, திருச்சி,  ஆரணி, கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, புதுச்சேரி ஆகிய பத்து தொகுதிகளில் தேனி தவிர  9 சிட்டிங் எம்பிக்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளனர்.

தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு,
கன்னியாகுமரி, விருதுநகர்,  சிவகங்கை, திருநெல்வேலி அல்லது தென்காசி, கடலூர், மயிலாடுதுறை,  கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள்  ஒதுக்கப்படலாம். 

திருச்சி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,   ஆரணி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மகனும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மைத்துனருமான டாக்டர் விஷ்ணு பிரசாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி ஆகியோர் தற்போது காங்கிரஸ் எம்பிக்களாக உள்ளனர். இதனால் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதிப் பட்டியல் டெல்லி சென்றுள்ளது. கடைசி நேர மாறுதலுக்குட்பட்டு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments