மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கினர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் விரும்புவதாகவும், இந்த மாற்றம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்,மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கையை 51-லிருந்து 81-ஆக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அமைச்சரவையில் தமிழகம் உட்பட இன்னும் சில மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

