Monday, March 16, 2026
HomeUncategorizedமதுரை ஆதீனம் 293வது குருமஹா சந்நிதானம் பட்டினப்பிரவேச காட்சிகள்..

மதுரை ஆதீனம் 293வது குருமஹா சந்நிதானம் பட்டினப்பிரவேச காட்சிகள்..

தமிழகத்தில் மிக தொண்மையான மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவிக்கப்பட்டார். 

புதிய ஆதீனமாக அறிவிக்கப்பட்ட ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு வழிபாடு மற்றும் பட்டினபிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய ஆதீனத்தை பிரகடனபடுத்தும் விதமாக மதுரை ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து சித்திரை வீதிகளில் உலா வந்தார். அப்போது, எராளமான பொதுமக்கள் மதுரை ஆதீனத்திடம் ஆசி பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில், தருமை ஆதீனம் 27வது குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசார்ய சுவாமிகள் நான்மாடக்கூடல் எழுந்தருளி இருந்தார்கள்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments