Home Uncategorized மதுரை ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

19மாதங்களுக்கு பின் இன்று முதல் மதுரை ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம். மதுரை – ராமேஸ்வரம் இடையே இன்று முதல் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் இயக்க தொடங்கியது.

சிறப்பு ரயில் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு காலை 09.30 மணிக்கு மதுரை வந்தடைந்தது.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Exit mobile version