Home Uncategorized முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 20 நபர்களுக்கு முன் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். எம். பாபு முருகவேல் ஆஜரானார் மனுதாரர்கள் அனைவருக்கும் முன் பிணை வழங்கி பெரியகுளத்தில் தங்கியிருந்து இரண்டு வாரங்களுக்கு தங்கியிருந்து கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையுடனான உத்தரவை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்தார்.

Exit mobile version