மூன்றாவது கட்டமாக, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர் கோவா, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்ட 1,351 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது

