Thursday, March 12, 2026
HomeUncategorizedமுதலமைச்சர் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

முதலமைச்சர் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி டிவிட்டரில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது வரவேற்கத்தக்கது. இதுபற்றி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி. பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாச்சார நலனையும் காக்க முடியும். இச் சட்டத்தை பாமக ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments